Sri Lakshmi Kuberar Temple, Ravathanallur

ஸ்ரீ லட்சுமி குபேரர் ஆலயம், இராவத்தநல்லூர்

ஆலயங்கள்

ஆலயங்கள் மற்றும் அதன் விவரங்கள்

மூலவர் - ஸ்ரீ மகாலட்சுமி மற்றும் ஸ்ரீ குபேரர் சித்திரலேகா அம்பாள்

இவ்வாலயத்தில் மூலவராக இருந்து அருள் புரியும் ஸ்ரீ மகாலட்சுமி மற்றும் ஸ்ரீ குபேரர் சித்திரலேகா அம்பாளுக்கு உப்பு தீபம் ஏற்றி நாம் மனதில் என்ன நினைக்கின்றோமோ அது விரைவில் நம் கண் முன்னே நடப்பதால் இவ்வாலயத்திற்கு நினைப்பதை நடக்க வைக்கும் ஸ்ரீ லட்சுமி குபேரர் ஆலயம் என்று அழைக்கப்படுகிறது இவ்வாளயத்தில் தங்கள் குடும்பத்தார் பெயரில் அர்ச்சனை செய்து உப்பு தீபம் ஏற்றி வழிபட்டு தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.

ஸ்ரீ செல்வ மஹாலக்ஷ்மி கணபதி

ராவத்தநல்லூர் நினைப்பதை நடக்க வைக்கும் ஸ்ரீ லட்சுமி குபேரர் ஆலயத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீ செல்வ மஹாலக்ஷ்மி கணபதிக்கு 5 நெய் தீபம் ஏற்றி வழிபடுவோருக்கு நினைத்த காரியம் கைகூடிவரும் மேலும் சங்கடகர சதுர்த்தி அன்று தேங்காய் தீபம் ஏற்றி வேண்டிக் கொள்பவர்களுக்கு கடன் பிரச்சனை மற்றும் செய்வினை கோளாறுகள் நீங்கும்.

ஸ்ரீ குபேர லிங்கம்

ஆலயத்தில் கிழக்கு முகமாக அருள் புரியும் ஸ்ரீ குபேர லிங்கத்திற்கு வில்வ இலையை வைத்து வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் பிரதோஷ நாட்களில் வில்வ இலையினால் கட்டிய மாலை சமர்ப்பணம் செய்து வழிபட்டால் குபேர யோகம் கிடைக்கும்

ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி

இவ்வாலயத்தில் தெற்கு முகமாக அமர்ந்து அருள் பாலிக்கும் ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்திக்கு 9 நெய் தீபம் ஏற்றி வழிபட்டால் தொழில் சார்ந்த பிரச்சனைகள் விலகும் செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

ஸ்ரீ சரஸ்வதி தேவி

இவ்வாலயத்தில் வடக்கு முகமாக அமர்ந்து அருள் பாலிக்கும் ஸ்ரீ சரஸ்வதி தேவிக்கு எட்டு நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் பிள்ளைகளுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும் படிப்பில் நல்ல முன்னேற்றம் அடைவார்கள் விரும்பிய பதவி அல்லது உத்தியோகம் கண்டிப்பாக கிடைக்கும்

ஸ்ரீ துர்க்கை அம்மன்

இவ்வாலயத்தில் வடக்கு முகமாக நின்று அருள் புரியும் ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு நல்லெண்ணெய் மற்றும் எலுமிச்சம் பழத்தில் ஐந்து விளக்கு ஏற்றி வழிபட்டால் உங்கள் குடும்பத்தில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி குடும்பத்தில் கணவன் மனைவி ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர்

இவ்வாலயத்தில் தெற்கு முகமாக அமர்ந்து அருள் புரியும் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் மூர்த்திக்கு சிவப்பு துணியால் கட்டப்பட்ட 9 மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் உங்கள் குடும்பத்தில் ஆரோக்கியம் அதிகரிக்கும் செல்வ வளம் பெறுவதற்கு தடையாக உள்ள தீய சக்திகள் விலகும் வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமியில் வெண்பூசணி காயில் தீபம் ஏற்றி வழிபட்டால் சகல தோஷங்களும் நீங்கும்.

ஸ்ரீ யோக ஆஞ்சநேயர்

இவ்வாலயத்தில் கிழக்கு முகமாக நின்று அருள் புரியும் ஸ்ரீ யோக ஆஞ்சநேயருக்கு ஒன்பது வாரம் வெற்றிலை மாலை அல்லது எலுமிச்சை பழ மாலை கட்டி அணிவித்து வேண்டிக் கொண்டால் தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் வம்பு வழக்குகளில் வெற்றி கிடைக்கும் வாழ்வில் முன்னேறும் யோகம் கிடைக்கும்.

தம்பதி சகித நவகிரகங்கள்

இவ்வாலயத்தில் தம்பதி சகிதமாய் அருள் வழங்கிக் கொண்டிருக்கும் நவகிரகங்களுக்கு கருப்பு துணியில் கட்டப்பட்ட 9 எல் தீபம் விளக்கு ஏற்றி 9 சில்லறை நாணயங்களை சமர்ப்பணம் செய்து வழிபட்டால் திருமண தடை தொழில் முன்னேற்றத்தில் தடை போன்ற பிரச்சனைகள் நீங்கி நவக்கிரகங்களின் அருள் ஆசியினால் உங்கள் இல்லங்களில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறும் பணவரவு அதிகரிக்கும் நவதானியம் வைத்து வழிபடுவோருக்கு சகல நன்மைகளும் கிடைக்கும்.