Sri Lakshmi Kuberar Temple, Ravathanallur

ஸ்ரீ லட்சுமி குபேரர் ஆலயம், இராவத்தநல்லூர்

கோவில் அமைவிடம்

நினைப்பதை நடக்க வைக்கும்
ஸ்ரீ லட்சுமி குபேரர் ஆலயம்

கள்ளக்குறிச்சி மாவட்டம் வானபுரம் தாலுக்கா ராவுத்தநல்லூரில் எழுந்து அருள் புரியும் நினைப்பதை நடக்க வைக்கும் ஸ்ரீ லட்சுமி குபேரர் ஆலயம் அமைந்துள்ள இடம். (இராவத்தநல்லூர் ஒரு ஆன்மீகம் நிறைந்த திருத்தலமாகும்) திருவண்ணாமலை TO கள்ளக்குறிச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் 30 கிலோமீட்டர் தொலைவில் புதூர் கூட்ரோடு என்ற இடத்தில் பிரியக்கூடிய சாலையில் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இராவத்தநல்லூர் இந்த சாலை கல்வராயன் மலைப்பகுதியில் உள்ள சேராப்பட்டு (இதுவும் ஒரு சுற்றுலா தலமாகும்) என்ற ஊருக்கு செல்லக்கூடிய சாலை ஆகும் திருவண்ணாமலையில் இருந்து ராவத்த நல்லூர் வருவதற்கு சுமார் ஒரு மணி நேரம் ஆகும் கள்ளக்குறிச்சியில் இருந்து இங்கு வருவதற்கு 28 கிலோமீட்டர் (சுமார் 40 நிமிடம் ) ஆகும் தனியார் பேருந்து மற்றும் அரசு பேருந்து வசதிகள் உள்ளன மற்றும் புதூர் கூட்ரோட்டில் இருந்து இராவத்தநல்லூர் செல்வதற்கு எந்நேரமும் ஆட்டோ வசதியும் உள்ளது

கோவில் திறந்திருக்கும் நேரம்
( 7 am to 8.30pm )

img
கோவில் பரிகாரங்கள்
வீடியோக்கள்
புகைப்படங்கள்
குபேரன் மந்திரங்கள்

குபேரன் மூல மந்திரம்:

ஒம்ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் லஷ்மி குபேராய நம:

குபேரன் துதி:

ஒம் குபேரம் மநு ஜாசினம் ஸகர்வம் கர்வ விக்ரஹம் ஸ்வர்ணச்சாயம் கதா ஹஸ்தம் உத்தராதிபதிக் ஸ்மரேத்

பொருள்: குபேரனே,நர வாகனனே, வடதிசைக்கதிபனே,கதாயுதனே,
விருப்பங்கள் அனைத்தையும் அளிப்பவனே உன்னைத் தியானிக்கிறேன்.

ஒம் ஸ்ரீ யஷ ராஜாய குபேராய வைச்ரவணாய தன தான்யாதிபதயே தனதான்யஸம் ருதிம்மே தேஹி தாபய தாபஸ ஸ்வாஹா !!

பொருள்: யட்சராஜனே,குபேரனே,விச்ரவசின் புதல்வனே,செல்வங்களின் அதிபதியே என் அவசியமான தேவைகளை நிறை வேற்றிக் கொள்ள தேவையான செல்வத்தை எனக்கு அருளச் செய்வீராக.

ஒம் க்லீம் ல்ஷ்மி குபேராய தனதான்யாதிபதயே மம ஐஸ்வர்யம் தனதான்ய விருத்திம் குருகுரு ஸ்வாஹா!!

பொருள்: ஸ்ரீ மகாலஷ்மியின் பூரண அருள் பெற்ற குபேரனே,எனது வறுமை நீங்கிட தேவையான செல்வத்தை அளிப்பீராக.

ஓம் ஸ்ரீம் ஓம்ஸ்ரீம் க்லீம்ஸ்ரீம் விநேஸ்வராய நம!”

Play Audio